சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பிக்கு புதிய அறை: இருக்கையில் அமர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பிக்கு புதிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழியை இருக்கையில் அமர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழிக்கு புதிதாக அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் கனிமொழியை அமர்த்தி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

அப்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பிக்கு புதிய அறை: இருக்கையில் அமர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: