கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்று முதல் மூன்று தினங்கள் வரை இந்தப் பகுதி மூடப்பட்டிருக்கும் என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.