திராவிட மாடல் முதல்வர் ஆட்சியில் கீழடி அகழாய்வு முழு அளவில் ஊக்குவிக்கப்பட்டது. அது குறித்த ஆய்வுமுடிவுகளைப் பற்றி முதல்முறையாக சட்டமன்றத்தில் பேசினார். நிதி ஒதுக்கீடு குறித்து தவறான தகவலை அதிமுகவினர் சொல்லியுள்ளனர், உதயகுமார் ரூ.55 லட்சம் ஒதுக்கியுள்ளதாக கூறினார். இன்றைக்கு மா.பா ரூ.105 கோடி ஒதுக்கியதாக கூறியுள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியில் இரண்டே இரண்டு அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டறை பரம்மத்தூரில் ரூ.5 லட்சம் ஒதுக்கினர். கீழடிக்கு ரூ.55 லட்சம் ஒதுக்கியுள்ளனர். ஒரு அப்படமான பொய்யாக ரூ.105 கோடி செலவு செய்ததாக சொல்லியுள்ளனர். ஆனால் நாம் மொத்தம் 30 இடங்களில் ஆய்வு செய்து 37 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு ரூ.27 கோடி ஒதுக்கினர். ரூ. 1 கோடி செலவு செய்த அதிமுக எங்கே? ரூ.27 கோடி செலவு திராவிட மாடல் அரசு எங்கே? 2016ல் கீழடி ஆய்வு நிறுத்தப்படும்போது ஏன் அதிமுக கண்டன குரல் ஏன் எழுப்பவில்லை? தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் துரோகம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமியைத தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post தொல்லியல் ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது அரசு தமிழர் பண்பாட்டுக்கு துரோகம் செய்து வரும் எடப்பாடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ பேட்டி appeared first on Dinakaran.
