இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியல் தயாரிப்பது தொடர்பாக கடந்த ஜூன் 11ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்புதான், குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, 2023 செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்கள், ஜூலை 21ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.
The post கருணை அடிப்படையில் வேலை தொடர்பான வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் தலைமை செயலாளர் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
