பின்னர் பேருந்தில் இருந்து இரண்டு மாணவர்களும் பள்ளியின் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இருவரிடையே மோதல் அதிகரித்ததால் வசீகரன் என்ற மாணவன் சதீஷ்குமார் என்ற மாணவனை கழுத்தின் பின்பக்கம் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் சதீஷ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வசீகரன் என்ற மாணவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சதீஷ்குமார் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஆரணி டவுன் பகுதியில் சக மாணவனை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
