திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஒசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
மேற்கண்ட பிவிஎஸ்சி – ஏஎச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளையுடன் (ஜூன் 20) விண்ணப்ப பதிவு நிறைவடைகிறது.
The post கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி appeared first on Dinakaran.
