ஆகவே திருச்செந்தூரில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும். திமுக அரசு உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்திய போது, எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்கவில்லை. மதச்சார்புடைய எவ்வித அடையாளமும் இன்றி நடைபெற்றது. நாங்கள் வாகனம் ஏற்பாடு செய்து யாரையும் அழைக்கவில்லை, ரசீது புத்தகம் அச்சடித்து பணம் வசூலிக்கவில்லை. ரயிலில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்கவில்லை. எங்கள் மாநாட்டில் 27 நாடுகளில் இருந்து உண்மையான முருக பக்தர்கள் பங்கேற்றனர். இந்து அறநிலையத்துறை சார்பில் நடந்த மாநாட்டிற்கு முதல்வர் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முழுக்க முழுக்க முருக பக்தர்களால் நடத்தப்பட்டது. இவர்களின் மாநாடு அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.
The post திராவிட மாடல் ஆட்சியில் திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.
