சேலம், ஜூன் 18: பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் ஆவின் சார்பில் 1,787 பயானாளிகளுக்கு ரூ5.34 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று சேலத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினர். இதைதொடர்ந்து, கால்நடைதுறை வல்லுனர்கள், பால் உற்பத்தியை பெருக்க ஆலோசனைகளை எடுத்துரைத்தனர். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வு குறித்தும் கால்நடை மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.
இதைதொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் 1,787 பயனாளிகளுக்கு ரூ.5.34 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர், பால்வளத்துறை ஒருங்கிணைந்த அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மற்றும் சங்க செயலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், பால் உற்பத்தி, கொள்முதலை அதிகப்படுத்துவது குறித்தும், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஊக்க தொகை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சேலம் ஆவின் பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post ஆவின் சார்பில் ரூ.5.34 கோடியில் 1,787 பேருக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.
