அதிமுக மாஜி அமைச்சர் கோயிலில் திடீர் தியானம்

விருதுநகர்: அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோயிலில் நேற்று இரவு திடீர் தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தாணிப்பாறை பகுதியில் சர்வேஸ்வரர் கோயில் மற்றும் தியான நிலையம் அமைந்துள்ளது. இக்கோயிலில் 18 சித்தர்கள் மற்றும் விநாயகர், வராகி அம்மன், பைரவர், கருப்பசாமி, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இங்கு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்றிரவு இக்கோயிலுக்கு வந்தார். இரவு 10.30 மணியளவில் கோயிலில் உள்ள தியான நிலையத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். பின்பு கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் கூறுகையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி, ராஜேந்திர பாலாஜி தியானத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

The post அதிமுக மாஜி அமைச்சர் கோயிலில் திடீர் தியானம் appeared first on Dinakaran.

Related Stories: