×

இந்தியா-இங்கி. மோதும் டெஸ்ட்டின் பட்டோடி டிராபி தொடர் பெயரை மாற்ற பிசிசிஐ எதிர்ப்பு

மும்பை: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் 20ம்தேதி நடைபெற உள்ளது. 2007ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக இந்தியா ஆடும் டெஸ்ட் தொடர் பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டது. இந்திய அணியின் முதல் டெஸ்ட் கேப்டன் பட்டோடியை கவுரவிக்கும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் இந்த டிராபியை சச்சின்-ஆண்டர்சன் டிராபி என பெயர் மாற்றம் செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் முன்னாள் இந்திய கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

The post இந்தியா-இங்கி. மோதும் டெஸ்ட்டின் பட்டோடி டிராபி தொடர் பெயரை மாற்ற பிசிசிஐ எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Ing. ,PCCI ,Collision Test's Barrel Trophy ,Mumbai ,England ,Ingi ,BCCI ,Clash Test ,Patodi Trophy ,Dinakaran ,
× RELATED இன்று 5வது மகளிர் டி20: இலங்கை ஒயிட்வாஷ்… இந்தியா காட்டுமா மாஸ்?