சென்னை: கடந்த 2009 ஜூலை 15ம் தேதி, புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்து பேசியதாக, வைகோவுக்கு எதிராக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வைகோ தரப்பில் அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கின் இறுதி விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The post தேச துரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மனு: உயர் நீதிமன்றத்தில் 27ல் இறுதி விசாரணை appeared first on Dinakaran.