நத்தம் பகுதியில் விளைநிலங்களில் புகுந்து காட்டு மாடுகள் அட்டகாசம்: விவசாயிகள் அச்சம்

 

நத்தம், ஜூன் 13: நத்தம் அருகே சிறுகுடி, ஆனைமலைபட்டி, பிள்ளையார் நத்தம், கோட்டையூர், பாலப்பட்டி, மணக்காட்டூர், குடகிபட்டி, சேத்தூர், துவராவதி உள்ளிட்ட மலையடிவார கிராமங்கள் உள்ளன. இப்பகுதி விளை நிலங்களில் நெல், சோளம், பருத்தி, வெள்ளரி, நிலக்கடலை, தட்டை பயறு போன்ற பயறு வகைகள் பயிரிட்டிருப்பதுடன் மாமரங்களையும் அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி விளைநிலங்களில் காட்டுமாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன் வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து குட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனியப்பன் கூறுகையில், ‘பகலிலே விளைநிலங்களில் காட்டுமாடுகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் பெரும் நஷ்டமடைந்து வருகிறோம். மேலும் ஆடு, மாடுகளை தாக்கியும் வருவதால் வெளியில் வரவே அச்சமடைந்துள்ளோம். எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post நத்தம் பகுதியில் விளைநிலங்களில் புகுந்து காட்டு மாடுகள் அட்டகாசம்: விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: