கும்பகோணம், ஜுன் 13: கும்பகோணம் அஞ்சலகத்தில் வரும் 16ம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கும்பகோணம் அஞ்சல் கோட்டம் கீழ் உள்ள சுவாமிமலை துணை அஞ்சல் அலுவலகத்தின் ஆதார் சிறப்பு முகாம் 11ம் தேதி முதல் சுவாமிமலை வாசவி அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. சுவாமிமலை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் இந்த சேவையினை பெற்று வருகின்றனர்.
அஞ்சல்துறை மூலம் எளிதில் பெறப்படும் சேவையானது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இம்மாதம் 16ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் பதிவு செய்து தரப்படுகிறது. ஆதார் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பிறந்ததேதி மாற்றம் ஆகிய சேவைகளுக்கு ரூ.50ம், பயோமெட்ரிக் புதுப்பித்தல் போன்ற சேவைகளுக்கு ரூ.100ம் கட்டணமாக பெறப்படுகிறது. தேவையான ஆவணங்கள் கொண்டு நடைபெறவிருக்கும் ஆதார் சிறப்பு சேவையினை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post கும்பகோணம் அஞ்சலகத்தில் வரும் 16ம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.
