இளம்பெண் தற்கொலை

வேடசந்தூர், ஜூன் 12: வேடசந்தூர் பாம்பாட்டி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (30). இவர் அதே தெருவை சேர்ந்த திவ்யா (26) என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்னை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திவ்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆவதால் பழநி கோட்டாட்சியர் விசாரணைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

The post இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: