×

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் வரும் 31ம் தேதி துவக்கம்

அகமதாபாத்: இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) போட்டிகள், வரும் 31ம் தேதி துவங்க உள்ளன. இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளன. இதில் சென்னை லயன்ஸ் உட்பட 8 அணிகள், 23 போட்டிகளில் மோதுகின்றன. வரும் 31ம் தேதி துவங்கும் முதல் போட்டியில் சீசன் 2 சாம்பியன் அணியான, தபாங் டெல்லி டிடிசி, ஜெய்ப்பூர் பேட்ரியாட் அணியுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து, கோவா சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணி களமிறங்குகிறது.

டேபிள் டென்னிஸ் போட்டிகளில் உலக தரவரிசையில் 14ம் இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்ஸ், வளர்ந்து வரும் இந்திய நட்சத்திரம் யஷஸ்வினி கோர்படே ஆகியோரை உள்ளடக்கிய யு மும்பா டிடி அணி, வரும் ஜூன் 1ம் தேதி நடக்கும் போட்டியில் ஸ்பெயின் ஜாம்பவான் அல்வாரோ ரோபிள்ஸ் தலைமையிலான பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிக்கு எதிராக மோதுகிறது. ஜூன் 2ம் தேதி, யு மும்பா டிடி – அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணிகளும், ஜூன் 3ம் தேதி, சென்னை லயன்ஸ் – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

சென்னை அணி, ஜூன் 5ம் தேதி அகமதாபாத் அணியுடனும், 7ம் தேதி யு மும்பா டிடி அணியுடனும், 9ம் தேதி டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணியுடனும் களம் காண்கிறது. இறுதிக் கட்டமாக, அரை இறுதிப் போட்டிகள் ஜூன், 13, 14 தேதிகளில் நடக்கின்றன. இறுதிப் போட்டி ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது.

The post அல்டிமேட் டேபிள் டென்னிஸ் வரும் 31ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Table Tennis ,Ahmedabad ,Indian ,Oil Ultimate Table Tennis ,UTT ,Indian Oil ,Ultimate Table Tennis ,Ahmedabad, Gujarat ,Chennai Lions… ,Dinakaran ,
× RELATED குவீன்ஸ் கிளப் டென்னிஸ்; லெஹெக்காவை...