×

தோஹா டயமன்ட் லீக்: ஈட்டியெறிதலில் அபாரம்; நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி: 90 மீட்டர் துாரம் எறிந்து சாதனை


தோஹா: தோஹா டயமன்ட் லீக், ஈட்டியெறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, முதல் முறையாக 90 மீட்டர் துாரம் ஈட்டியெறிந்து 2ம் இடம் பிடித்தார். கத்தாரின் தோஹா நகரில், தோஹா டயமன்ட் லீக் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் பிரிவில் நடந்த ஈட்டியெறிதல் போட்டிகளில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தன் வாழ்நாள் சாதனையாக, 90.23 மீட்டர் துாரம் ஈட்டியெறிந்து புதிய சாதனை படைத்தார். இப்போட்டியில் 2ம் இடம் பிடித்த அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஜெர்மன் வீரர் ஜூலியன் வெபர், 91.06 மீட்டர் துாரம் ஈட்டியெறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரர் கிஷோர் ஜேனா 85.64 மீட்டர் துாரம் ஈட்டியெறிந்து 8ம் இடத்தை பிடித்தார். ஈட்டியெறிதல் போட்டிகளில் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியெறிந்த 3வது ஆசிய வீரராக நீரஜ் சோப்ரா உருவெடுத்துள்ளார். இப்பட்டியலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம் (92.97 மீட்டர்) முதலிடத்திலும், சீன தைபே வீரர் சாவோ சுன்செங் (91.36 மீட்டர்) 2ம் இடத்திலும் உள்ளனர்.

The post தோஹா டயமன்ட் லீக்: ஈட்டியெறிதலில் அபாரம்; நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி: 90 மீட்டர் துாரம் எறிந்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Doha Diamond League ,Neeraj Chopra ,Doha ,India ,Doha, Qatar ,Doha Diamond League Sports Club ,Javelin ,Dinakaran ,
× RELATED குவீன்ஸ் கிளப் டென்னிஸ்; லெஹெக்காவை...