கருவுற்ற காலம் முதல் பிரசவ காலம் வரை சாக்பீஸில் செதுக்கி சாதனை: இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் பதிவு: மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உன் வரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் 26. இவர் தற்போது புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ இறுதியாண்டு பயின்று வருகிறார். இவர் ஒரு மருத்துவராக இருந்த போதிலும் கலை நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறார்.  8.3 செ.மீ உயரத்தில் கருவுற்ற காலம் முதல் பிரசவ காலம் வரை சாக்பீஸில் செதுக்கி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பதித்துள்ளது.இதுகுறித்து சந்தோஷ் இடம் தினகரன் பத்திரிக்கை வாயிலாக  கேட்டபோது பல் மருத்துவ படிப்பில் முதலாண்டு செய்முறை கூடத்தில்  பற்களை அவரவர்களே வடிவமைக்க வேண்டும். அதை நான் சிறப்பாகவே செய்தேன். இதனை என் நண்பர்களும் எனது ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தனர்.  அவர்கள் என்னை ஊக்குவித்ததன் பெயரில் சுண்ணாம்புக் கற்களை கொண்டு சிறிய உருவ சிற்பங்களை  வரையத் தொடங்கினேன். பின்னர் சாக் ஆர்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  ஒரு சாக்பீஸில் ஒரு தாய் கருவுற்ற காலத்தில் இருந்து பிரசவம் பிறப்பு முறை  குழந்தை தன் வயிற்றில் இருக்கும் நிலையை  8.3 சென்டி மீட்டர் உயரத்தில் 3 மணி நேரம் செலவழித்து  வரைந்தேன். இதையே முதல் படியாக கொண்டு ,விநாயகர் சிலை, சிவலிங்க சிலை மனித மூளை, திருவள்ளுவர் சிலை,அண்ணா சிலை போன்ற உருவங்களை 1 செ. மீ உயரத்தில் செய்தேன். நான் செய்த உருவச் சிலைகளை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பி வைத்தேன். அதனை அவர்கள்  ஏற்றுக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை அனுப்பி வைத்தனர். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் தமிழகத்தைச் சேர்ந்த எனது சாதனைகளும் இடம் பிடித்துள்ளது என்பது எனக்கு பெருமைக்குரியதாக இருந்தது. எதிர்காலத்தில் கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவாக உள்ளது என கூறினார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவரை அழைத்து நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்….

The post கருவுற்ற காலம் முதல் பிரசவ காலம் வரை சாக்பீஸில் செதுக்கி சாதனை: இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் பதிவு: மாவட்ட ஆட்சியர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: