ராஜபாளையத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி: ராம்கோ சேர்மன் துவக்கி வைத்தார்

ராஜபாளையம், மே 13: ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. 3ம் நாள் போட்டிகளை ராம்ேகா சேர்மன் துவக்கி வைத்தார். ராஜபாளையம் நகர் கூடைப்பந்து கழகம் சார்பில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி பிஏசிஎம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக நடைபெறுகிறது.

இதில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கேரள மின்வாரியம், காவல்துறை, பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி, மும்பை மேற்கு ரயில்வே அணி, சென்னை வருமான வரித்துறை அணி, ரைசிங் ஸ்டார் அணி உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆண்கள், மகளிர் பிரிவில் லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுக்களாக போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டி வரும் 15ம் ேததி வரை நடைபெறுகிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் மூன்றாம் நாள் போட்டியை ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, ராம்கோ சமூக சேவைகள் பிரிவு தலைவர் நிர்மலா வெங்கட்ராமராஜா நேற்று துவக்கி வைத்தனர். இதில் இந்திய ராணுவ அணியும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணியும் மோதின.

ஏற்பாடுகளை ராஜபாளையம் நகர கூடைப்பந்து கழக தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த், பொருளாளர் ராம்சிங்ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

The post ராஜபாளையத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி: ராம்கோ சேர்மன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: