திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைப்பகுதியில் மழை பெய்வதை அறிந்த இந்து அறநிலையத்துறை பணியாளர்கள், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனே அப்புறப்படுத்தியதால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.