மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது. இந்த நிலையில் தான் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (மே 10) ஒரு கிராம் தங்கம் ரூ.9045க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (மே12) 22 காரட் தங்கம் கிராமுக்கு அதிரடியாக ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ரூ. 1320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7320க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 1320 குறைந்து விற்பனை appeared first on Dinakaran.
