தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இன்று காலை 6.30 மணியளவில் மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் பக்தர்கள், அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். இன்றிரவு 11.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தங்கி திருமஞ்சனமாகிறார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுந்தரராஜ பெருமாள், தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார்.
* மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
கடந்த ஏப்.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழாவின் 12ம் நாளான நேற்று கோயிலுக்குள் பட்டயக்கணக்கர் லட்சுமணன் சிவராமன் மண்டகப்படியில் மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர் எழுந்தருளினர். உச்சிக்காலத்தில் தெய்வேந்திர பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் 4 மாசி வீதிகளில் வீதி உலா வந்தனர். தொடர்ந்து இரவு கோயில் பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. திருக்கல்யாணத்திற்காக வந்த திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகியோர் ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து விடைபெற்று திருப்பரங்குன்றம் சென்றனர்.
The post நாளை அதிகாலை வைகையாற்றில் இறங்குகிறார் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர் appeared first on Dinakaran.
