இதை எதிர்க்கும் விதமாக ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். அதன்படி, வரும் 14ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள திரைப்படம், தொலைக்காட்சி, வலை தொடர், விளம்பரம் ஆகிய படப்பிடிப்பில் சம்மேளன தொழிலாளர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். இந்த நாளில் போஸ்ட் புரொடக்சன்ஸ் போன்ற எந்தவொரு பணிகளும் நடைபெறாது. அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைக்கும் இதுபோன்ற தீய செயல்பாடுகளை தடுத்து திரைத்துறையில் சுமுக நிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் உருவாக்கி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மே 14ம் தேதி சினிமா ஸ்டிரைக்; பெப்ஸி அறிவிப்பு appeared first on Dinakaran.
