இந்நிலையில் ஆசாத்லோடாவின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 2 மாதங்களுக்கு முன் அவர் ராஜஸ்தான் சென்றார். இதனால் கணையாலால் நகை கடையை கவனித்து வந்தார். கடந்த 3ம்தேதி மாலை 6 மணி அளவில் கடையிலிருந்து மொத்த நகைகளை பாதுகாப்பாக வைக்க எடுத்த சென்ற கணையாலால் அங்கு வைக்கவில்லை.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கடையை திறக்க கணையாலால் வரவில்லை. போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் ராஜஸ்தானில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை அரியலூர் வந்த ஆசாத்லோடா, கடையை திறந்து பார்த்தபோது கடை பெட்டகத்தில் வைத்திருந்த 250 பவுன் நகை, 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் இல்லாதது தெரிய வந்தது. தலைமறைவான கணையாலாலை போலீசார் தேடி வருகின்றனர்.
The post அடகு கடையில் 250 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.
