தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவியில் நேற்று குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு உரிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வனத்துறை முடிவு செய்துள்ளது.