சென்னை: அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கால்நடை அறிவியல் பல்கலை. மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.