சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 17ல் நிதி நிலை அறிக்கை மீதான விவாதமும் 24ம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
The post தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு appeared first on Dinakaran.