தெற்கு மும்பையின் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் கைசர்-ஐ-ஹந்த் கட்டிடம் உள்ளது. இந்த 5 அடுக்குமாடி கட்டிடத்தில், அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2.31 மணியளவில் கட்டிடத்தின் 4வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமெளவென அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் பரவியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 8 தீயணைப்பு இயந்திரங்கள், தண்ணீர் டேங்கர்கள் மூலம் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவத்தின் போது யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பல ஆவணங்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் அலுவலகத்தின் உள்ளே இருந்த மின்சாதனங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The post மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.
