அம்பை,ஏப்.27: அம்பை அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் செல்வி, மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் கிறாஸ் இம்மாகுலேட் ஆகியோர் தலைமை வகித்தனர். மகளிர் அணி நிர்வாகிகள் ஜான்சி ராணி ஷீலா பாரதி, வசந்தி, ஞான புனிதா, அதிமுக அமைப்புச் செயலாளரும், சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளருமான சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், நாராயண பெருமாள், மாநில ஜெ. பேரவை துணைச் செயலாளர் சிவன் பாபு, மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, அம்பை ஒன்றிய செயலாளர் துர்க்கை துரை, நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், விகேபுரம் கண்ணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுரேஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அம்பையில் அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
