சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அன்னவாசல் ஜல்லிக்கட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படுமா என்று சி.விஜயபாஸ்கர் கேள்விக்கு, அன்னவாசல் ஜல்லிக்கட்டில் தற்காலிகமாக டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.