காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்து பர்கிட் மாநகரில் எஸ்பிடிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம்

நெல்லை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாளை பர்கிட் மாநகரில் எஸ்டிபிஐ சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் நடந்தது.காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியானதை கண்டித்து பாளை ஒன்றியம் பர்கிட் மாநகரில் எஸ்டிபிஐ சார்பில் மனித நேயத்தின் மீது நடத்தப்பட்ட கொடுர தாக்குதல் என்ற முழக்கத்தோடு மெழுகு வர்த்தி ஏற்றி அமைதிக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் அப்துல் மஜீத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் பொறியாளர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ேசக் முகம்மது இலியாஸ், மகளிர் அணி முன்னாள் மாவட்ட தலைவர் ரினோஷா ஆலிமா, கிளை நிர்வாகிகள் அப்துல் முத்தலிப், செய்யது அலி, இஸ்மாயில், மைதீன், பக்கீர், முகம்மது, பௌசுல்ஹக், பாளை பகுதி தலைவர் நிஜாம், செயலாளர் கரீம், தொழிற் சங்க கிளை தலைவர் அசரப்அலி, மகளிர் அணி கிளை நிர்வாகிகள் தலைவர் நவ்ரோஸ்பானு, செயலாளர் செய்யது அலி, பசீர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதே போல் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதத்தால் கொல்லப்ட்ட மக்களுக்காக பாளை லூர்துநாதன் சிலை அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மதவெறியை மாய்ப்போம் மனித நேயத்தை காப்போம் என கோஷங்கள் எழுப்பியபடியே அனைத்து கட்சியினரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பீட்டர் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு தலைவர் பால் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தலைவர் காசி விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் மாவட்டச்செயலாளர் ராம், மதிமுக சட்டத்துறைச் செயலாளர் சுதர்சன், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழர் நீதிக்கட்சி மாவட்டச்செயலாளர் அழகுராஜன், காங்கிரஸ கட்சி பெருமாள், மனித நேய ஜனநாயக கட்சி மாநிலத்துனைச்செயலாளர் அல்பி பிலால், வழக்கறிஞர் முருகன், ராணுவ வீரர் சிவன் பாண்டியன், மதிமுக பண்டாரம் மற்றும் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிச்சையா, கோபால், சவுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்து பர்கிட் மாநகரில் எஸ்பிடிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: