×

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம்

தேன்கனிக்கோட்டை, ஏப்.25: கெலமங்கலம் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ், நெல்லூர் கிராமத்தில் வேளாண்மை உத‌வி இயக்குநர் ஜான்லூர்து சேவியர் தலைமையில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. அதியமான் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் பூபதி, துவரை மற்றும் பயிறு வகை பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் வினோத்குமார், இயற்கை விவசாயம், உயிர் உரங்களின் பயன்கள் குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா, அட்மா திட்டம் மற்றும் மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில், கல்லூரி மாணவர்கள் விதை நேர்த்தி குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் நவின்குமார் செய்திருந்தார்.

The post விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Thenkani Kottai ,Nellore ,Assistant Director of Agriculture ,Johnlurt Xavier ,Kelamangalam ,Assistant Professor ,Bhoopathi ,Adiyaman Agricultural College ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை