சிவகிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

சிவகிரி, ஏப். 24: சிவகிரியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை ராணி குமார் எம்பி திறந்து வைத்தார். சிவகிரி பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி எம்பி ராணி குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி, மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், செயலாளர் கவுன்சிலர் விக்னேஷ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் சேது சுப்பிரமணியன் வரவேற்றார்.

தென்காசி எம்பி ராணி குமார், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி பழங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மணிகண்டன், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் சுமதி, கார்த்திக், முத்துலட்சுமி, கட்டபொம்மன், மாரியப்பன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மருது பாண்டியன், மாவட்ட பிரதிநிதி நல்லசிவன், தங்கராஜ், பேரூர் இளைஞரணி செயலாளர் ராம்குமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post சிவகிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் appeared first on Dinakaran.

Related Stories: