கரூர்: கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நேற்று மதியம் அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இரண்டு சிறுவர்களும் நீச்சல் தெரியாததால் தடுமாறி இருவரும் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். மாலை 4 மணியளவில் இரண்டு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அமராவதி ஆற்றில் இறந்த இரண்டு சிறுவர்களும், கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த திவிங்சன்(13), கவிதாசன்(14) என்பதும், இருவரும் அரசு பள்ளியில் 9 மற்றும் 7ம் வகுப்பு பயின்று வந்தது தெரிய வந்தது.
The post அமராவதி ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.