திருமங்கலம், ஏப். 23: திருமங்கலம் அடுத்த கப்பலூரில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் 232 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர். திருமங்கலத்தினை அடுத்த கப்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இதன் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாளர் டாக்டர் முத்தையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமேற்புரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசும்போது, ஒவ்வொரு மாணவனும் எதிர்கால சமூகத்தை வடிவமைப்பதில் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கினார். பட்டமளிப்பு விழாவில் தமிழில் 78 பேரும், ஆங்கிலத்தில் 42 பேரும், கணிதத்தில் 59 பேரும், வணிகவியலில் 53 பேரும் பட்டங்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post திருமங்கலம் அருகே அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா: 232 மாணவ மாணவியர் பெற்றனர் appeared first on Dinakaran.
