×

.61 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ஏப்.23: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.61 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, நாமக்கல், புதுச்சத்திரம், காளப்பநாய்க்கன்பட்டி, காரவள்ளி, சேந்தமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்தனர். திருச்செங்கோடு, கொங்காணபுரம், ஈரோடு, திருப்பூர் திண்டுக்கல் போன்ற ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். பருத்தி ஏலத்திற்கு மொத்தம் 2500 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8433 வரையும், மட்ட ரக கொட்டுப்பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6289 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.61 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

The post .61 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Cooperative Society ,Namakkal Agricultural Producers Cooperative Sales Society ,Puduchattaram ,Kalapanaikkanpatti ,Karavalli ,Senthamangalam… ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்