சென்னை: ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம்புரண்ட நிலையில் இரு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. மின்சார ரயில் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியது. மேலும், சக்கரங்களை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.