சென்னை: இந்த ஆண்டு உலக கல்லீரல் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் கல்லீரல் தினத்தை அனுசரிக்க தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன் படி ஒருங்கிணைந்த அத்தியாவசதிய பரிசோதனை பணிகளின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனை(LFT) இலவசமாக செய்யவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கல்லீரல் ஆரோக்கியத்தை பரமரிக்க ஆரோக்கியமான உணவுகளை மக்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும் ஹெபடைடீஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் செல்வ விநாயகம் கூறினார்.
The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச கல்லீரல் பரிசோதனை appeared first on Dinakaran.