இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சௌந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், இந்த கல்லூரி திறப்பதற்கு முறையான அரசாணை வழங்கபட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்ப்பில், அறநிலையத்துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளில் சைவ சித்தாந்த பாடப்பிரிவுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நான்கு கல்லூரிகளிலும் சைவ சித்தாந்த பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. என்று வாதிடப்பட்டது. பழனி கோவில் சார்பாக அமைக்கப்படும் கல்லூரிக்கு கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. ஆகையால் தடை உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் ஐந்தாம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்த டி.ஆர்.ரமேஷ் இந்த வழக்கினை தள்ளுபடி செய்யுங்கள். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளேன் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், டி.ஆர்.ரமேஷ் உங்களின் போக்கு நீதிமன்றத்தை மிரட்டும் தொனியில் உள்ளது. இதற்கு நீதிமன்றம் பயப்படாது. இவ்வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
The post பழனி தேவஸ்தானம் சார்பில் கல்லூரி தொடங்குவதை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.