பார்சிலோனா: பார்சிலோனா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகளில் நேற்று, டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று பார்சிலோனா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகள் நடந்தன. முதலாவது காலிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே, நார்வே வீரர் கேஸ்பர் ரூட் மோதினர். துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஹோல்கர் இரு செட்களையும் எளிதில் கைப்பற்றினார். அதனால், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்ற அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் கரேன் அப்கரோவிச் காசனோவ், ஸ்பெயின் வீரர் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினோ போட்டியிட்டனர். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய காசனோவ், 2வது செட்டை போராடி வசப்படுத்தினார். அதனால், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு அவர் முன்னேறினார். அரை இறுதிப் போட்டிகள் இன்றும், இறுதிப் போட்டிகள் 20ம் தேதியும் நடைபெற உள்ளன.
The post பார்சிலோனா ஓபன் டென்னிஸ் ஹோல்கர் ரூனே அபாரம் அரையிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.