திருச்செங்கோடு, ஏப்.18: திருச்செங்கோடு தாலுகா, புதுப்புளியம்பட்டி கிராமத்தில் தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள், கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியை மேற்கொண்டனர்.அதில், ஒரு பகுதியாக வெண்டையை அதிகமாக தாக்கும் வெள்ளை ஈக்கள் மாவு பூச்சி மற்றும் இலைப்பேன் போன்றவற்றை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மஞ்சள் நிற ஒட்டும் பொறியை பயன்படுத்துவதன் மூலம் பூச்சிகளின் தாக்கம் 70 சதவீதம் குறையும். மகசூலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
The post மஞ்சள் நிற ஒட்டு பொறி செயல்விளக்கம் appeared first on Dinakaran.
