ராயக்கோட்டை, ஏப்.18: ராயக்கோட்டை அருகே தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் கொத்தமல்லி சாகுபடி பரப்பினை விவசாயிகள் அதிகரித்துள்ளனர். கொத்தமல்லி விதை விதைத்த ஒரு வாரத்தில் துளிர்த்து விடுகின்றன. அப்போது, நோய் தாக்காமலிருக்க பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கின்றனர். விதைத்த 80 நாட்களில் கொத்தமல்லி அறுவடைக்கு வந்து விடுகிறது. இவ்வாறு நன்றாக வளர்ந்த ஒரு கொத்தமல்லி தழையை கட்டு ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். கொத்தமல்லி தழைகளை வாங்கிச் செல்வதற்காக உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரியில் தினசரி வியாபாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
The post கொத்தமல்லி சாகுபடி பரப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.
