கொச்சி ஓட்டலில் போதைப்பொருள் சோதனை: நடிகர் ஷைன் டோம் சாக்கோ தப்பி ஓட்டம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து போலீசார் சோதனை நடத்த சென்றபோது பிரபல மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ அங்கிருந்து தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷைன் டோம் சாக்கோ. தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்பட மொழிகளில் நடித்துள்ள இவர் தமிழில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவரையும், சில மாடல் அழகிகளையும் கொச்சியில் ஒரு ஓட்டலில் வைத்து கொக்கைன் போதைப்பொருளுடன் போலீசார் கைது செய்தனர். கடந்த 10 வருடங்களாக நடந்த இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் கொச்சியிலுள்ள ஒரு ஓட்டலில் நடிகர் ஷைன் டோம் சாக்கோ உள்பட சிலர் தங்கியிருப்பதாகவும் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போலீசார் அந்த ஓட்டலில் சோதனை நடத்தச் சென்றனர். போலீசார் வருவது குறித்து அறிந்தவுடன் அந்த ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டோம் சாக்கோ உள்பட சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர். இவர் தப்பி ஓடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர். பின்னர் ஷைன் டோம் சாக்கோ தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை என்றாலும் அதை பயன்படுத்தியதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

நடிகை வின்சி பாலியல் புகார்
ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பில் தன்னுடன் நடித்த ஒரு முன்னணி நடிகர் போதை மயக்கத்தில் தன்னிடமும், சக நடிகையிடமும் தவறாக நடக்க முயற்சித்தார் என்று பிரபல மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் கூறியிருந்தார். ஆனால் அந்த நடிகர் யார் என்று அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் வின்சி அலோஷியசிடம் போதையில் தவறாக நடக்க முயற்சித்தது நடிகர் ஷைன் டோம் சாக்கோ என தெரியவந்துள்ளது. நடிகரின் பெயரை ரகசியமாக வைக்க வேண்டுமு் என்று புகார் செய்த போது தெரிவித்தபோதும், பெயரை வெளியிட்டதற்கு நடிகை வின்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post கொச்சி ஓட்டலில் போதைப்பொருள் சோதனை: நடிகர் ஷைன் டோம் சாக்கோ தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: