இதனை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் இம்முறை கோடை சீசனுக்கு கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த நகராட்சி சார்பில் புதிதாக நான்கு இடங்களில் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இடத்தில் சுற்றுலா பேருந்துகள் நிறுத்துவதற்கு தற்காலிக பேருந்து நிறுத்தம் மற்றும் மற்ற சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு தற்காலிக வாகன நிறுத்தமும், அப்சர்வேட்டரி பகுதியில் ரோஜா பூங்கா அருகில் தற்காலிக வாகன நிறுத்தமும், வட்டக்கானல் பகுதியில் தற்காலிக வாகன நிறுத்தமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நான்கு வாகன நிறுத்தங்களிலும் கடந்த 2 நாட்களாக கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கிய நகராட்சி நேற்று முதல் கட்டணங்களை நிர்ணயம் செய்து உள்ளது. இந்த வாகன நிறுத்தங்களில் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு இரண்டு மணிநேரத்திற்கு பேருந்துக்கு ரூ.200ம், வேனுக்கு ரூ.100, காருக்கு ரூ.70ம், டூவீலருக்கு ரூ.30ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் தொடர்ந்து இந்த வாகனங்கள் அந்த பகுதியில் நிறுத்தினால் அதற்குரிய கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தெரிவித்ததாவது: இந்த நான்கு வாகன நிறுத்தங்களிலும் கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும். நகராட்சி பணியாளர்களை நியமித்து கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும். அனைத்து வாகன நிறுத்த இடங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.
The post கொடைக்கானலில் புதிதாக அமைக்கப்பட்ட வாகன நிறுத்தங்களுக்கு கட்டணங்கள் நிர்ணயம்: சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள் appeared first on Dinakaran.
