×

காதல் மனைவிக்கு தெரியாமல் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த கணவன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

சூலூர்,ஏப்.17: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் நல்லூர்பாளையம் அடுத்துள்ள வதம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்யா (28). இவர் வதம்பச்சேரியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், சுபாஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஷோபிகா என்பவரை சௌந்தர்யாவுக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து, தற்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளதாக தெரிகிறது. இதற்கு சுபாஷின் குடும்பத்தினர் துணையாக இருந்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சௌந்தர்யா புகாரளித்துள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த கணவர் சுபாஷ், திருமணத்திற்கு உதவியாக இருந்த மாமனார் கருப்புசாமி, மாமியார் செல்வி, நாத்தனார் சரண்யா, சித்தப்பா குட்டி மற்றும் சுபாஷின் 2வது மனைவியான ஷோபிகா ஆகியோர் மீது அவர் புகார் அளித்தார். இது குறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகாரில் சம்பந்தப்பட்ட அனைவரும் தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

The post காதல் மனைவிக்கு தெரியாமல் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த கணவன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sulur ,Soundarya ,Vadambacheri ,Nallurpalayam ,Sultanpet ,Coimbatore district ,Subhash ,Subhash… ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது