சென்னையில் கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம்

சென்னை: சென்னையில் ஏப்.21-ம் தேதிக்கு பிறகு கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார். ஜனவரி முதல் தற்போது வரை 98 டன் அளவிலான கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. ஒரு டன் அளவுக்கு கட்டடக் கழிவுகள் இருந்தால் சென்னை மாநகராட்சி இலவசமாக அகற்றும். 1 முதல் 20 டன் வரை கட்டடக் கழிவுகளை அகற்ற ரூ.3,300 கட்டணம் வசூலிக்கப்படும் என கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: