கோவை: அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி தன் மீது அவதூறு பரப்பும் வகையில் பேட்டி அளித்ததாககூறி கோவை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் (ஜே.எம்.1) வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 1ம் தேதி நடந்தபோது, எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 15ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, இவ்வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆஜராகவில்லை.
அவரது தரப்பில் வக்கீல் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், “தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், சட்டமன்றத்தில் நடக்கும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அவசியம் பங்கேற்க வேண்டி உள்ளதால் விலக்கு அளிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்று விசாரணையை வரும் மே 2ம் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
The post கோவை நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜராகவில்லை appeared first on Dinakaran.