அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவனையில் தூய்மை பணியாளரை தாக்கிய டெக்னீசியனுக்கு அடி உதை கிடைத்துள்ளது. எக்ஸ் ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளர், டெக்னீசியன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது தூய்மை பணியாளர் உமா மகேஸ்வரியை டெக்னீசியன் ராஜு காலணியால் தாக்கியதாக புகார் எழுந்தது. வலி தாங்க முடியாமல் தூய்மை பணியாளர் அழுததைக் கண்ட சக பணியாளர்கள் டெக்னீசியன் ராஜுவை தாக்கினர். டெக்னீசியன் ராஜுவை தூய்மைப் பணியாளர்கள் சுற்றி வளைத்து தாக்கிய நிலையில் மருத்துவ அலுவலர்கள் அழைத்துச் சென்றனர்.
The post தூய்மை பணியாளரை தாக்கிய டெக்னீசியனுக்கு அடி உதை..!! appeared first on Dinakaran.