நேற்று முன்தினம் ஜனா தரப்பினர், சரத்குமாரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். சரத்குமார் நண்பர் சிவசங்கரனுடன்(28) டூவீலரில் இருப்பான்பூச்சி அருகே சென்றார். அப்போது ஜனா தரப்பினருக்கும், சரத்குமார் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜனா தரப்பில் வந்திருந்த தவசுகுடியை சேர்ந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் பிரபு, சேதாம்பல் கிராமத்தை சேர்ந்த விக்ரம், சிவா மற்றொரு நபர் உட்பட 5 பேரும் சேர்ந்து வாளால் சரத்குமாரையும், சிவசங்கரனையும் சரமாரி வெட்டியுள்ளனர்.
இதில் சரத்குமார் உயிரிழந்தார். படுகாயத்துடன் சிவசங்கரன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சரத்குமாரின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று, மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி ஆஷிஸ் ராவத் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார். இதையடுத்து, சஸ்பெண்ட் போலீஸ் பிரபு, விக்ரம், ஜனா, சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post பெண் ஊழியருக்கு மெசேஜ் விவகாரம் வாளால் வெட்டி வாலிபர் கொலை: சஸ்பெண்ட் போலீஸ் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.