அதை ஏற்று கடந்த 1989ம் ஆண்டு சிட்ரப்பாக்கத்தில் ஆரணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பணை சேதமடைந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு ரூ.3.42 கோடி மதிப்பில் தடுப்பணை மற்றும் அதன் கரைகளை பொதுப்பணி துறையினர் புதுப்பித்தனர்.
இதற்கிடையே கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர பகுதிகளான புத்தூர், நகரி, நாகலாபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், ஆந்திர மாநிலத்தில் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர், சுருட்டப்பள்ளி அணைக்கட்டுக்கு வந்து, அங்கிருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள சிட்ரப்பாக்கம் தடுப்பணையில் நிரம்பி வழிகிறது. இதனால் நடப்பாண்டில் விவசாய பணிகளுக்கும் ஊத்துக்கோட்டை, அனந்தேரி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post ஆந்திரா பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் சிட்ரப்பாக்கம் தடுப்பணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.