நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீசின் நோக்கம், காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் செயல்படக் கூடிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான இடங்களை அபகரித்து காங்கிரசை செயல்பட விடாமல் முடக்குவதே. இந்த வழக்கில் ஏன் 13 ஆண்டுகளாக காத்திருந்தீர்கள்? ஏனென்றால் நீங்கள் சொத்தை அபகரிக்க விரும்புகிறீர்கள். நாடு முழுவதும் நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமாக ரூ.600 கோடி சொத்து இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
எனக்கு தெரிந்த வரை காங்கிரசிடம் அவ்வளவு இல்லை. இந்த சொத்துக்களை கைப்பற்றி கட்சியை செயல்பட விடாமல் செய்யப் பார்க்கிறார்கள். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இது இந்த அரசின் மனநிலையை பிரதிபலிக்கும் துரதிஷ்டவசமான நிகழ்வு. நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. பல மாநிலங்களில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி மாநில அரசுகளை பாஜ சீர்குலைத்து வருகிறது.
ஹேமந்த் சோரன் விஷயத்திலும் இது நடந்தது. ப.சிதம்பரம் வழக்கில் அவரை கைது செய்து அவருக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளன என்றீர்கள். அதன் பின் எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன? இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் நீங்கள் ஒரு நபரின் கட்சியின் நற்பெயரை அழித்துவிட்டீர்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கிலும் இதுபோன்ற செயல்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறி உள்ளார்.
The post நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் சொத்துக்களை அபகரித்து காங்கிரசை முடக்க முயற்சி: பாஜ மீது கபில்சிபல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.